அங்க தான் விலை கம்மியா கிடைக்குது!!!
உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
சவுதி அரேபியா,ஈராக் நாடுகளை மட்டுமே ஒரு கட்டத்தில் நம்பி வந்த இந்தியா தற்போது ரஷ்யாவில் மலிவு விலையில்
கச்சா எண்ணெய் கிடைப்பதால் ரஷ்யாவிடம் இருந்து அதிகம் வாங்குகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு 9 லட்சத்து 46 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது
இந்தியா செய்துவரும் இறக்குமதியில் ரஷ்யாவின்பங்கு மட்டும் 22% ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ஈராக்கிடம் இருந்து 20.5% மற்றும் சவுதி அரேபியாவிடம் இருந்து 16% கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையும்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விகிதமும் மொத்தமாக 5 % உயர்ந்துள்ளதாகவும் ரஷ்யாவில் இருந்து அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியா 8% கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாகவும் வார்டெக்சா நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. பின்னர்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் அளவு குறைய வாய்ப்புள்ளதாகவும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எது எப்படியோ, எங்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ அங்கே வாங்குவோம், என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது.