சீனாவை விட இந்தியாவில் தான் கம்மி…. தெரியுமா?
US NEWS AND world report என்கிற அமைப்பு உலகத்தில் உள்ள 85 நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். அதில்
சிறந்த நாடுகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே எந்த நாட்டில் பலவிதமான பொருட்களின் விலையின்
உற்பத்தி விலை குறைவு என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 31வது இடம் கிடைத்துள்ளது,சீனா,வியட்நாமைவிடவும் இது குறைவு என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 73 அம்சங்கள் அடிப்படையில் 85 நாடுகளில் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டன.மிகக்குறைந்த உற்பத்தி செலவில் வியாபாரத்துக்கு உகந்த நாடு எது என்ற பிரிவில் நூற்றுக்கு நூறு புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளது. வரி அதிகம் உள்ள நாடுகள் பிரிவில் இந்தியாவுக்கு 100க்கு 16.2 புள்ளிகள் தான் கிடைத்துள்ளன.லஞ்சம் இல்லாத நாடு என்ற பிரிவில் இந்தியாவுக்கு வெறும் 18.1 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன.அரசு கொள்கையில் வெளிப்படைத்தன்மை என்ற பிரிவில் இந்தியாவுக்கு 100க்கு வெறும் 3.5 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லா பிரிவுகளிலும் சேர்த்து முதலிடத்தில் ஸ்விட்சர்லாந்து உள்ளது இரண்டாவது இடத்தில் ஜெர்மனி,கனடா,அமெரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. உற்பத்தி செலவில் இந்தியா சீனாவை மிஞ்சியுள்ளதாக அமெரிக்க நிறுவன அறிக்கை கூறியுள்ளது இந்தியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.