எல்லாரும் என்ன பண்றாங்களோ அதே நாமலும் பண்ணுவோம்!!!!
உலகில் பெரிய நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவை வட்டி விகிதங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக இந்தியாவிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அண்மையில் 25 அடிப்படை புள்ளிகள் விலை உயர்த்தியது, பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் 75 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது, இவ்வாறு உயர்த்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா,பிரிட்டனின் வங்கிகளின் பிரதிபலிப்பாக இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்த இருப்பதா தகவல் வெளியாகியுள்ளது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் நிதி கொள்கை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை 190 அடிப்படை புள்ளிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. கோவிட், ரஷ்யா உக்ரைன் போரைத் தொடர்ந்து வட்டி உயர்வு மிக முக்கிய பிரச்னையாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தோல்வியுற்றது ஏன் என்பது குறித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.