இந்த வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்!!!! எச்சரிக்கும் எலான் மஸ்க்!!!!
சமூக வலைதளமான டிவிட்டரில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்கள் கிடைத்து வருகின்றன,செயலியில் அப்டேட் கிடைக்கிறதோ இல்லையோ, புதுப்புது விதிகள் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தனை காலமாக பெரிய பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புளூ டிக் வெரிபிகேசன் வசதி
இனி 8 டாலர் செலுத்தினால் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்று டிவிட்டரின் புதிய முதலாளி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த நிலையில் டிவிட்டரில் டிஸ்பிளே பெயரில் ,தனது சொந்த பெயர் இல்லாமல் வேறு நபரின் பெயரை மாற்றி போலி கணக்குகள் லட்சக்கணக்கில் உள்ளன.இந்த சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின்
கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த விதிப்படி முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும், அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் ஆள்மாறாட்டம் செய்தால் கணக்கு முடக்கப்படும் என்று இருந்தது. ஆனால் டிவிட்டரின் புதிய விதிப்படி ஆள்மாறாட்டம் செய்தால் அவரின் கணக்கு எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் முடக்கப்பட இருக்கிறது. முதலில் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களின் கணக்குகளில் உள்ள புளூடிக் முதலில் நீக்கப்பட்டு பின்னர் கணக்கே முழுமையாக முடக்கப்பட உள்ளது. அடுத்தடுத்த கடுமையான கட்டுப்பாடுகளால் வெறுப்படைந்த டிவிட்டர் பயனர்கள் தங்கள் கணக்குகளை நீக்கிவிட்டு டிவிட்டரை விட்டு வெளியேறி வரும் போக்கு அதிகரித்து வருகிறது. 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் தினந்தினம் புதுப்புது வசதிகளை செய்ய உள்ளதாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் பணம் செலுத்தினால் புளூ டிக் வரும் வசதி முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்க உள்ளதாகவும், பின்னர் படிப்படியாக பிறநாடுகளுக்கும் இந்த வசதி கிடைக்க இருக்கிறது.