இனி இதுக்கு என்ன புது கதை சொல்லுவாங்களோ???
கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொது மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசு தரவுகளின் படி அக்டோபர் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் வசம் 30 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது நவம்பர் 4, 2016 அன்று இருந்ததைவிடவும் தற்போது பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. சரியாக திட்டமிடாமல் 500,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்ற நடவடிக்கை செய்ததாக பல பொருளாார நிபுணர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த செயலின்போது மக்கள் மத்தியில் வெறும் 17.7 லட்சம் கோடி ரூபாய் பணம் மட்டுமே இருந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும்கூட ரொக்கப்பணத்தின் பயன்பாடு இன்றும்
அதிகமாகவே உள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் பணப் புழக்கம் குறைந்திருந்தாலும் , ரொக்கமாக பணத்தை கொடுத்து பொருளை வாங்காமல் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை அதிகளவில் நடந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த 2009ம் ஆண்டு துவக்கத்தில் நிலவிய பொருளாதார மந்த நிலையின்போது மக்கள் பொருட்களை வாங்குவதை குறைத்தனர். இதே சூழல் கடந்த தீபாவளி பொருட்கள் வாங்கியதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டிஜிட்டல் மற்றும் ரொக்கப்பண பயன்பாடு அதிகரித்தாலும் மக்களின் வாங்கும் திறன் சற்று குறைந்துள்ளது என்பதே உண்மை. பணம் பதுக்கப்படுகிறது என்பதற்காக தான் பண மதிப்பிழப்பே கொண்டு வரப்பட்டது. அப்போது, அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறுங்கள் என்று மத்திய அரசு கூறியிருந்தாலும், மக்கள் பணத்தை நம்பும் அளவிற்கு தொழில்நுட்பத்தை நம்பவில்லை என்பதையே இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.