பாகிஸ்தானுக்கு எல்லாம் தரீங்க, எங்களுக்கும் அப்படியே….!!!!!
கடும் பொருளாதார சிக்கல் மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த பாகிஸ்தானுக்கு நட்பு நாடான சீனா
தீடீரென உதவிக்கரம் நீட்டியது பாகிஸ்தான் மழை வெள்ளத்தால் தேசம் தவித்துக் கொண்டிருந்த போது, 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிதியை பாகிஸ்தானுக்கு அளித்து சீனா அதிரடி காட்டியது. இந்த நிலையில் இலங்கைக்கு அதிக கடனை கொடுத்துவிட்டு நாட்டையே திவாலாக்கியதில் சீனாவின் பங்கு மிக அதிகம் இந்த சூழலில் மீண்டும் இலங்கைக்கு சீனா நிதி உதவி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மீட்டு எடுக்க சர்வதேச நாணய நிதியமே நிதி தர தயங்கியது. இலங்கைக்கு தற்போது அதன் தோழமை நாடான சீனா உதவ திட்டமிட்டுள்ளது. கடனில் தத்தளிக்கும் இலங்கையின் நிதி நிலையை சீரமைக்க இந்தியாவும்,ஜப்பானும் ஏற்கனவே நடவடிக்கைகளை துவங்கியுள்ள நிலையில், சீனாவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலால் பேச்சுவார்த்தை தள்ளிப்போனது இலங்கை அரசின் தரவுகளின்படி ஜூன் 30ம் தேதியுடன் நிறைவுற்ற வாரத்தில் இலங்கையின் வெளிநாட்டு கடன் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது இதில் சீனாவுக்கு மட்டும் இலங்கை 7 பில்லியன் டாலர் அளிக்க வேண்டியுள்ளது. வரும் டிசம்பரில் சர்வதேச நாணைய நிதியம் கடன் அளிக்கத்தவறும்பட்சத்தில் மேலும் சீனாவிடம் இருந்து இலங்கை கடன் வாங்க இருக்கிறது.