முடிவுக்கு வந்தது சண்டை ….
இந்துஜா குழுமம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமாகும்…ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக் ஆகிய நான்கு
சகோதரர்கள் இணைந்து இந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினர் . இந்த நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் இவர்கள் 2014ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதில் சம்பாதித்துள்ள சொத்துகள் நான்காக பிரிக்க கூடாது என்றும் பொதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது . ஆனால் மூத்தவர் மற்ற அனைவருக்கும் குறைவான மதிப்பு அளிப்பதாகவும், ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தது. விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், தற்போது இந்துஜா சகோதரர்கள் நான்கு பேருக்கும் சொத்து பொதுவானதாக இருக்கும் என்றும் 2014ம் ஆண்டு ஒப்பந்தம் தேவைப்பட்டால் கலைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துக்கள் பிரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிரிட்டனில் பெரிய நிறுவனமாக உள்ள இந்துஜா குழுமம், உடைக்கப்பட்டால் 4ஆக சிதறிவிடும் சூழல் உருவாகியுள்ளது. சகோதரர்கள் சண்டை முடிவுக்கு வந்தாலும் சொத்து பிரச்சனை நீண்டுகொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்துஜா குழும சண்டை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகி்றது.. லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்துஜா குழுமத்தில் எந்ததுறை வியாபாரத்தை யார் கவனிப்பார்கள் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.