COCA COLA-வுக்கு இப்படி ஒரு பெயர் இருக்கா???
பிரேக் ஃபிரீ பிரம் பிளாஸ்டிக் என்ற அமைப்பு உலகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளாக உலகிலேயே அதிக பிளாஸ்டிக் கழிவுகளை
தருவது கோக்க கோலா நிறுவனம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெப்சி மற்றும் 3ம் இடத்தில் நெஸ்ட்லே நிறுவனமும் உள்ளன. இந்திய அளவில் பெப்சியின் பிளாஸ்டிக் குப்பைதான் மிக அதிகளவில் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மாநில அளவில் 2020-ல் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதிக பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைக்கு சென்றது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 11 ஆயிரம் நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக அளவாக உணவுப்பொருட்கள் பேக் செய்யும் போதும்,வீட்டு உபயோக பொருட்கள் இரண்டாம் இடம் மற்றும் பேக்கேஜிங் மெட்டிரியல்கள் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் பெட் பாட்டில்கள் எனப்படும் பாலி எத்திலீன் டெரப்தாலேட், உயர் அடர்த்தி
பாலித்தீன் மற்றும் பிவிசி ஆகியவைதான் என்கிறது அந்த ஆய்வு. சுற்றுச்சூழலுக்கு ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோக்க கோலா நிறுவனம் மறுபக்கம் சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு ஸ்பான்சர் அளித்துள்ளது. அண்மையில் நடந்த காப்27 என்ற எகிப்திய மாநாட்டை கோக்க கோலா ஸ்பான்சர் செய்தது குறிப்பிடத்தக்கது.