பார்ரா !!!! இதுக்கு வந்த வாழ்வை!!!!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பட்ஜெட் கல்யாணங்களும், எளிமையான திருமணங்களும் நடைபெற்று முடிந்தன
இந்த நிலையில் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் பொதுமக்கள் மண்டபங்களில் திருமணங்களை வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் ஆயிரம் நகரங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் திருமணம் சார்ந்த தேவைகள் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரியவந்தது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் தரவுகளின்படி அலங்காரம், போட்டோகிராபர், மண்டபம்,திருமண பேண்டு உள்ளிட்டவற்றை தேடுவோரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இரண்டாம் தர நகரங்களில் 48% அதிகமாகவும், முதல்தர நகரங்களில் 22% தேவை அதிகரித்துள்ளது. அடுத்த 30 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன, டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 27% மண்டபங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. திருமண அலங்காரம் செய்வோரின் அளவு மும்பை, டெல்லி, பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
திருமணத்துக்கு போட்டோ எடுக்க போட்டோகிராபர்களின் தேவை கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. திருமண மண்டபம், போட்டோகிராபரைத் தொடர்ந்து கேட்டரிங் பணிகளை செய்வோரின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது.