முதலீட்டாளர்கள் எந்த இந்திய நிறுவன பங்குகளை விரும்பி வாங்குகிறார்கள்???
இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டாவது காலாண்டில் குறைந்தது அதாவது 19 % பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளாக செய்துள்ளனர். ஜொமேட்டோ மற்றும் ஐடிசி நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 764 பேர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்திய பங்குகளில் அதிக முதலீடுகள் செய்வது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவன சொத்துக்களில்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர்.
அதாவது மொத்தம் 24 ஆயிரத்து 898 கோடி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நவ்ரத்னா டிஃபென்ஸ் சிஸ்டத்தில் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன. நவரத்னா நிறுவனத்தின் பாரத் எலெக்ட்ரானிக்சில் மட்டும் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிற இந்தியாவின் முன்னணி பங்குகளான ஐடிசி, ஜொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரண்டாவது காலாண்டில் கவனம் செலுத்தியுள்ளனர். பஜாஜ் பின்சர்வ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் லாபகரமாக மாறத் தொடங்கியது.
வங்கித்துறையில் ஐசிஐசிஐ வங்கியை அதிகம் பேர் தேர்வு செய்தனர். உலகளவில் பெரிய பொருளாதார சிக்கல் உள்ள நிலையில் உள்ளூர் பங்குகளில் மக்கள் அதிகம் முதலீடு செய்யலாம். இரண்டாவது காலாண்டில் பிரீமியம் செக்மெண்டில் கேப்பிட்டல் மற்றும் ஆட்டோ மொபைல் பங்குகள்தான் விலை உயர்ந்துள்ளன. எண்ணெய் மற்றும் எண்ணெய் ஆதரவு பொருட்கள்தான் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள துறைகளாக உள்ளன.