வருகிறது புதிய திட்டம் !!! டிராய் அதிரடி…
தெரியாத எண்களில் இருந்தோ, சந்தேகத்துக்கு இடமான வகையிலோ தொலைபேசி அழைப்புகள் வருவது
இந்திய மக்கள் மத்தியில் பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது மறுமுனையில் பேசுபவரின் பெயர் எந்த ஊர் என்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர். சில நேரங்களில் பெரிய சங்கடங்களும் இந்த வகை போன்களால் வந்துவிடுகிறது.
இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட நினைத்த மத்திய அரசு, இனி போன் பேசும் அனைவரும் தங்கள் அடையாளத்தை மறு முனையில் இருப்பவருக்கு தெரியும் வகையில் விரிவான திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. மறுமுனையில் இருந்து அழைப்பவரின் விவரங்களை ட்ருகாலர் உள்ளிட்ட செயலிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த செயலியின் நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாகியுள்ளது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இதற்கென பிரத்யேக வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒருநபருக்கு தொலைபேசி அழைப்பு வரும்போது,எதிர்முனையில் இருப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எளிதில் செல்போன் திரையில் தெரியும்படி இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு வாங்கும் போது தரும் கேஒய்சியில் உள்ள பெயர் இனி எதிர்முனையில் உள்ளவரின் திரையில் தெரிய இருக்கிறது. இதன் மூலம் தெரியாத எண்ணாகவோ, தெரியாத நபராகவோ இருந்தால் அழைப்பை தவிர்த்து விட முடியும். இதற்கென பிரத்யேக மென்பொருள் தேவையா இல்லை, தற்போது உள்ள மென்பொருளே போதுமா என்பது குறித்து டிராய் இறுதி முடிவு எடுக்க உள்ளது. செல்போன் அழைப்புகளுக்கு மட்டும் இல்லாமல், வாட்ஸ் ஆப் அழைப்புகளுக்கும் இந்த தகவல் பொருந்தும் என்றும் டிராய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.