வருகிறது சம்பள உயர்வு!!!
இந்திய ரயில்வேவில் 80 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய ரயில்வே வாரிய தலைவர் வி.கே. திரிபாதி, புதிய சம்பள உயர்வு தொடர்பாக மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் களப்பணியாளர்களுக்கு தற்போது கிடைக்கும். சம்பளத்தை விட கூடுதலாக 2,500 முதல் 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்க இருக்கிறது. பல்வேறு சிக்கன நடவடிக்கையில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பணியாளர்களுக்கு கூடுதலாக அளிக்க முடிவதாகவும், கூடுதல் நிதிச்சுமை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பள உயர்வுடன் சில பணியாளர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படாமல் கிடந்த சில துறை பணியாளர்கள் இதன் மூலம் பலனடைய உள்ளனர். களப்பணியாளர்கள் சம்பளம் கூடுவதால் ரயில்வேவுக்கு தற்போதைய நிலையை விட 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஆகலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.