கொட கொடா பிளேன்களுக்கு பை பாய்…ஏர்இந்தியாவில் களமிறங்குது புது ஃபிளைட்டு….
உப்பு முதல் விமானம் வரை கால்வைக்கும் இடங்களில் எல்லாம் கொடிகட்டி பறக்கும் டாடா நிறுவனம், அண்மையில் இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா விமானத்தை தன் வசப்படுத்திக்கொண்டது டாடா குழுமம் இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு புதிதாக விமானங்கள் வாங்க, விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் மற்றும் போயிங்கிடம் டாடா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தற்போது பயன்பாட்டில் இல்லாமல் கிடப்பில் கிடக்கும் பழைய விமானங்களை பழுதுநீக்குவது,விமானங்களை வாடகைக்கு விடுவதிலும் டாடா குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. உலகளவில் டாடா குழுமம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 30 % பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தற்போது உள்ளதை விட கூடுதல் சேவைகளை இந்தியா முழுவதும் அளிப்பது மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குவது குறித்தும் டாடா குழுமம் பரிசீலித்து வருகிறது. இந்திய சந்தையில் டாடா குழும விமான சேவையின் பங்கு வெறும் 10%ஆக மட்டுமே உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க டாடா குழுமம் ஏர்பஸ்ஸுடன் பேசி வருகிறது. முழுமையாக புதிதாக விமானங்கள் வாங்க முடியவில்லை என்றாலும் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவன விமானங்களை வாடைக்கு எடுக்கவும் ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முதல்கட்டமாக 70 பெரிய விமானங்களை இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும், 300 குட்டி ரக விமானங்களும் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.