கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள்…
பங்குசந்தையில் போடும் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதே நிலையில்லாமல் இருப்பதாக தற்போதைய சூழல் உள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518 புள்ளிகள் சரிந்தன 61 ஆயிரத்து 144 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 160 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.திங்கட்கிழமை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகளைத் தவிர மற்ற அனைத்து துறை பங்குகளும் சரிவை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம், ஆட்டோமொபைல் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு மதிப்பு பலத்த அடிவாங்கின அதானி துறைமுகம்,டெக் மகேந்திரா,ஹிரோ மோட்டாகார்ப் மற்றும் ஹிண்டால்கோ நிறுவனங்கள் அதீத பாதிப்புகளை சந்தித்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் பணத்தை போட லேசான தயக்கத்தை காட்டி வருகின்றனர். மத்திய ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதத்தை பொருத்தே முதலீட்டாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. ஆசியா, ஜப்பான் மற்றும் சீனாவின் பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. சீனாவில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக பல்வேறு பொருட்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருப்பது தடைபட இருக்கிறது இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.