பணத்தை செலவு செய்யாமல் சேர்த்து வையுங்கள்!!!! ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்!!!!
ஒரு காலத்தில் உலகளவில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்தவர் அமேசான் நிறுவன உரிமையாளர்
ஜெஃப் பெசாஸ்., தற்போது விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நஷ்டத்தை சந்திக்கும் அமேசான் நிறுவனம் தற்போது பல்வேறு துறைகளில் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. இந்த சூழலில் ஜெஃப் பெசாஸ் அண்மையில் சிஎன்என் செய்திகள் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அமெரிக்கர்கள் பணத்தை வீணாக செலவு செய்யாமல் அடுத்தாண்டுக்கு தேவை என கொஞ்சம் பணத்தை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள் என பீதியை கிளப்பினார். உலக பணக்காரரே இத்தகைய நிலைக்கு வெளிப்படையாக அறிவித்துவிட்டதால் பலரும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். உண்மையில் அமெரிக்காவில் அடுத்தாண்டு மேலும் கடுமையான சிக்கல்கள் இருக்கலாம் என்பதைத்தான் ஜெஃப் பெசாஸ் நேரடியாகவே தெரிவித்தார். இந்த சூழலில் பொருட்களை விற்கும் நிறுவனத்தை வைத்துக் கொண்டு இப்படி பெசாஸ் பேசலாமா என்றும், அது அவருக்குத்தான் பாதகத்தை ஏற்படுத்தி நிறுவனத்தை மேலும்
மோசமாக்கும் என்றும் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். முதலில் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை பாருங்கள் என்றும் 10 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கிவிட்டு நீங்கள் எப்படி அமெரிக்கர்களுக்கு அறிவுரை சொல்வீர்கள் என்றும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.