எல்லா வங்கிகளும் இதில் மட்டும் ஒரே மாதிரி தான்!!!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்து வரும் கடன் தொகைக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்போது வேறு வழியே இல்லாமல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கும் கடனின் வட்டி விகிதத்தை உயர்த்துவது இயல்பான ஒன்று., இந்நிலையில் கொரோனா காலகட்டத்துக்கு பிறகு மட்டும் மத்திய அரசு 4 முறை ரெபோ விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதாவது மொத்தம் 190 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு பெரிய தொகையில் கடன் பெற்றிருந்தால் மிகப்பெரிய சிக்கலை உருவாக்குகிறது வரும் நாட்களிலும் மேலும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் திட்டமிட்டுள்ளன அவ்வாறு நடந்தால் தற்போது கடனில் தள்ளாடும் மக்கள் மேலும் திக்குமுக்காடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 2019ம் ஆண்டுக்கு பிறகு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள கடன் அளவை தாண்டி வங்கிகள் பொதுமக்களுக்கு கடன் வழங்கக்கூடாது என்பது விதி.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் கடன்களுக்கான வட்டியை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் தனியார் வங்கிகளும் உயர்த்திவிடுகின்றன. அரசுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்துவது மெதுவாக இருந்தாலும் அவர்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு கட்டணத்தை தான் வசூலிக்கின்றனர். ஆனால் முதலில் உயர்த்துவது தனியார் வங்கிகள் என்பதுதான் கசப்பான உண்மை. அடுத்த முறை ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்துவதா வேண்டாமா என்பது குறித்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம், வரும் டிசம்பர் 5 முதல் 7ம் தேதிக்குள் நடைபெற இருக்கிறது.