சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள்,கடந்த 3 நாட்களாக பெரிய பாதிப்புகளை சந்தித்து வந்தன, இந்நிலையில் இன்று பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்தது மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் 61 ஆயிரத்து 418 புள்ளிகளாக இருந்தது இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்தது சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்துள்ள போதும்
இந்தஸ் இன்ட், என்டிபிசி, ஜேஎஸ் டபிள்யூ,எச்டிஎப்சி லைப் ஆகிய நிறுவனங்கள் நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளன.
மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் மற்றும் உலோகத்துறை பங்குகள் அரை விழுக்காடு லாபத்தை சந்தித்தன. வரும் நாட்களில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் காணும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.