ஐயோ!!!! இப்ப நான் எதையாவது விக்கணுமே!!!
மத்திய அரசு ஆண்டுதோறும் தன்னிடம் தேவையில்லாமல் வைத்திருக்கும் சொத்துகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த வகையில் தற்போது அனைத்துத்துறை அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது எந்த சொத்துகள் எல்லாம் விரைவாக விற்று காசாக மாற்ற முடியுமோ அதை பட்டியலிட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முதல் 7 மாதங்களில் 33 ஆயிரத்து443 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன நடப்பாண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை விற்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அரசு நிர்ணயித்ததைவிட குறைவான சொத்தகளை மட்டுமே பல துறைகள் விற்றுள்ளன
இலக்கை எட்டாத துறைகளுக்கு மத்திய அரசு தற்போது புதிய அறிக்கையை அளித்துள்ளது., அதில் விற்கவேண்டிய சொத்துகளை விற்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் பெட்ரோலிய துறைகள் தொய்வை சந்தித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.குறிப்பாக தொலைத்தொடர்புத் துறையில் பாரத் நெட் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக வேறு சொத்துக்களை விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது தொலைத்தொடர்புத் துறையில் 20 ஆயிரத்து 180 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நான்கில் ஒரு பங்கு கூட விற்கப்படவில்லை. ரயில்வேதுறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 999 கோடி ரூபாய் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இதேபோல் பெட்ரோலியத்துறையில் 9 ஆயிரத்து 176 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் விற்க திட்டமிடப்பட்ட நிலையில் வெறும் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.