இது அமேசானின் புதிய உருட்டு!!!
உலகளவில் பெரியளவில் மின்வணிகம் செய்து வரும் அமேசான் நிறுவன வருவாயில் இந்தியாவின் பங்கு மிகமுக்கியமானது
அசுர வேகத்தில் வளர்ந்த அமேசான், உலகளவில் சரிவை சந்தித்துள்ளது. சரிவை சமாளிக்க முடியாத அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் எத்தனை பேரை பணிநீக்கம் செய்தீர்கள் என அமேசான் நிறுவனத்துக்கு மத்திய அரசு கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது . இதற்கு பதிலளித்துள்ள அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒருவரை கூட தாங்களாக நீக்கவில்லை என்று கூறிய அமேசான் நிறுவனம், தாங்களே விலகிக்கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளதாகவும்,அதில்தான் பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் இதுவரை நேரடியாக 11 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கி வருகிறது மேலும் 2025ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் புனேவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் கணிசமான அளவில் பணியாளர்களை வேலையைவிட்டு தூக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் வரும் 30ம் தேதிக்குள் ஆட்களை வீட்டுக்கு அனுப்ப கெடு நிர்ணயித்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து பெங்களூருவில் விசாரணை நடைபெற்றபோது,அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அமேசான் நிறுவனத்துக்கு ஹைதராபாத்,பெங்களூரு,சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரிய அலுவலகங்களும், கிடங்குகளும் உள்ளன.16 இடங்களில் இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் அமேசான் முக்கிய பங்கு வகிக்கிறது. யாரையும் வேலையைவிட்டு இந்தியாவில் நீக்கவில்லை என்று அமேசான் அறிவித்துள்ளது, அச்சத்தில் இருந்த சில பணியாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.