மறுபடியும் விலையை ஏத்திட்டாங்க!!!
இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமே கார்கள் வாங்கி பயன்படுத்தும் நிலையில், சில சொகுசு கார்கள், அந்தஸ்துக்காகவும் கவுரவத்துக்காகவும் வாங்கப்படுகின்றன. இந்தளவுக்கு பிரமாண்டமான சொகுசுகார்களை தயாரிப்பதில் முக்கிய இடத்தில் உள்ளது வோல்வோ நிறுவனம் இந்த கார்கள் வெறும் கார்களாக இல்லாமல் கப்பல் போன்ற பிரமாண்டங்களை கொண்டிருக்கும் ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளது தங்கள் நிறுவனத்தின் கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்90 ரக பெட்ரோலிய கார் மற்றும் Xc40 பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் கார்கள் விலையில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விலை உயர்வு நவம்பர் 25ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய சந்தைக்கு தகுந்தபடி xc40,மின்சார கார்கள்,xc90 suv,xc60 உள்ளிட்ட கார்களை வோல்வோ நிறுவனம் அண்மையில் வெளியிட்டது இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. பெங்களூரூவில் உற்பத்தியாகும் இந்த ரக கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது உயர்த்தப்பட்ட கார்களின் விலை பட்டியலும் வெளியாகியுள்ளது.
*XC40 Recharge P8 Ultimate: Rs 56.90 லட்சம்
*XC60 B5 Ultimate: Rs 66.50 லட்சம்
*XC90 B6 Ultimate: Rs 96.50 லட்சம்.