தமிழகத்தில் 400 கோடி முதலீடு செய்கிறது சாம்சங்….
இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் 5ஜி செல்போனுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 4ஜி மற்றும் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாம்சங் நிறுவனம் களமிறங்கியுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் அமைய உள்ள பெரிய முதலீடு இது என சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நோக்கியா,ஜபில் நிறுவனங்கள் இந்த உபகரணங்கள் உற்பத்தி செய்து வந்தாலும் உற்பத்தி சார்ந்த திட்டத்தில் சாம்சங் உற்பத்தியை தொடங்க இருக்கிறது காஞ்சிபுரம் அருகே உள்ள ஆலையில் இந்த உற்பத்தி நடைபெற இருக்கிறது. 5ஜி செல்போன்கள் மற்றும் டவர்களுக்கான உதிரி பாகங்களை சாம்சங்க் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த சூழலில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த உதிரிபாகங்களுக்கு சாம்சங்கிடம் அதிக தொகை்க்கு ஆர்டர் செய்துள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவன டவர்களுக்கு 5ஜி வசதிக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் உரிமத்தை சாம்சங்க் அண்மையில் பெற்றது குறிப்பிடத்தக்கது.