இந்தியாவில் 5ஜி சேவை வேகமாக கிடைக்கும்: நோக்கியா
உலகிலேயே அதிவேகமாக 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது சீனாவின் 5ஜி வேகத்தை விட இந்தியாவில் வேகம் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி,இந்தியாவில் 5ஜி சேவை சரியான நேரத்தில் அறிமுகமாகியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதுள்ள 4ஜி வசதியைவிட குறைந்தபட்சம் 3 மடங்கு அதிக வேகத்தில் 5ஜி சேவை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஏற்கனவே 10 %மக்கள் 5ஜி வசதியுள்ள செல்ஃபோன்களை வைத்துள்ளதாகவும்,அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி வசதி கிடைத்துவிடும் என்றும் அந்த நபர் தெரிவித்தார். வரும் 2023 டிசம்பருக்குள் இந்தியா முழுதும் 5ஜி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஜியோவும், 2024-ல் ஏர்டெல் நிறுவனமும் உறுதிகொண்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தால் இந்தியாவில் தொலைதொடர்புத்துறை புத்துயிர் பெற்றுள்ளதாக கூறிய நோக்கியா நிறுவன அதிகாரி, தற்போதைய நிலையில் செமிகண்டக்டர்கள் எனப்படும் அரைக்கடத்திகள் பற்றாக்குறை உள்ளதாக கூறியுள்ள அவர், அடுத்த சில ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை பலமடங்கு அதிகரிக்க உள்ளதாகவும் பிற துறைகளைவிட விவசாயத்துறை 5ஜி மூலம் இன்னும் அதிக பலன்களை பெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.