இந்திய பங்குச்சந்தையில் அடுத்தது என்ன?
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3% உயர்ந்துள்ளன. சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன எனினும் இந்திய பங்குசந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது
, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் இந்தியாவில் பங்குச்சந்தைகள் உயர்ந்துள்ளன
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18ஆயிரத்து 611 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவும் சாதகமான சூழல் காரணமாகவும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அறிவிக்க இருக்கிறார்.
இதன் பிரதிபலிப்பாகவே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்பட்சத்தில் அமெரிக்க டாலர் சற்று சரியும்.இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலீட்டாளர்கள் விரைவில் அதனை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகளாக செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழலை உருவாக்க அதிக வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவின்பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்த பண்டிகை நாட்கள் அடுத்தடுத்த சுபமுகூர்த்த நாட்களும் இந்திய சந்தையை மிகவும் ஈர்த்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை பிரேசில், இந்தோனேசியா,தைவான் உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் காணப்படுகிறது.