வீட்டுக்கடனுக்கு தேவை அதிகரிக்குமாம் !!!
அடுத்த 4-5 ஆண்டுகளில் வீட்டுக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று hdfc நிறுவன தலைமை செயல் அதிகாரி Keki Mistry கூறியுள்ளார். வீட்டு கடன் துறை நாளுக்கு நாள் வலுவாக உள்ளது என்று கூறிய அவர், உள் கட்டமைப்பு துறையில் நாளுக்கு நாள் அதிக அளவில் முதலீடுகள் தேவைப்படுகிறது என்றார். Hdfc வங்கி்யின் தாய் நிறுவனமான இந்த நிறுவனம் வங்கியுடன் விரைவில் இணைய இருக்கிறது. இதனை ஒட்டி வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. முதலீட்டாளர்களுக்கு இது மோசமான செய்தியாக இருந்தாலும், வங்கி துறையின் முக்கிய அம்சமாக உள்ளது. நகரங்களில் வீட்டுக்கடன் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் தலைமேல் பெரிய கடனாக வீட்டுக்கடன் உள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி வாராக்கடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்த வீட்டுக்கடன்தான். இந்த பிரிவு கடன் தான் வங்கிகளுக்கு எளிது ஆனால் வசூலிப்பது கடினமாக உள்ளது. தனிநபர் கடனில் பெரிய பங்கை வகிக்கும் இந்த கடன் என்பது பலராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதே நிதர்சனம்.