உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்கு
ஜூன் 28ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டு உள்ளன.இது 3% உயர்வாகும். அந்த நிறுவனத்தில் ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் வகை வாகன விற்பனை அதிகளவில் இருப்பதால் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான clsa-வும் டாடா குழுமத்தின் மதிப்பை உயர்த்தியது. இதன் விளைவாக டாடா மோட்டார்ஸ் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் டாடா கார்கள் மற்றும் வாகனங்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதாக கூறும் clsa, டாடா குழும கார்கள் பங்குகள் 2024-25 நிதியாண்டில் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேறும் என்று கணித்து உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக டாடா கும்மம் ipo வெளியிட்டது. 74.69% பங்குகளை டாடா வைத்துள்ளது. கடன்களை குறைக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும், இந்த பங்கை டாடா குழுமம் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த பங்கு ஏற்கனவே 51% ஏற்றம் பெற்றுள்ளது.