நிதி பற்றாக்குறை 4.51லட்சம் கோடியாக உயர்வு….
மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 4.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மே மாதத்தில் வெறும் 2.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கணக்கு கட்டுப்பாட்டு பொது அதிகாரியின் தரவுகள் கடந்த 31ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2024நிதியாண்டின் மொத்த நிதி பற்றாக்குறை 17.84 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் கால் பங்கு அளவுக்கு அதாவது 25 .3% நிதி பற்றாக்குறை பதிவாகியுள்ளது. கடந்த 2022-23நிதியாண்டில் இதே காலகட்டமான முதல் காலாண்டில்,வருவாய் நிதி பற்றாக்குறை என்பது 21.1விழுக்காடாக இருந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கணக்குப்படி 28..3%இது அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.ஜூன் மாதத்தில் மட்டும் நிதி பற்றாக்குறை 62.9% உயர்ந்திருக்கிறது. வரி அல்லாத வருவாய் மே மாதம் அதிகரித்தது.ஜூன் மாதத்தில் மட்டும் மத்திய அரசுக்கு 1.56 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. வரி வருவாய் குறைந்தபோதிலும்,கடந்தாண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூனில் ஜிஎஸ்டி வரி வசூல் ஜூன் மாதத்தில் 11.3% உயர்ந்திருக்கிறது. முதலீட்டு செலவீனங்களில் மத்திய அரசு அதிக தொகை ஒதுக்கியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலண்டில் மத்திய அரசின் வரிவருவாய் கணிசமாக குறைந்துள்ளது. உள்கட்டமைப்புகளுக்காக 10.51 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை , உள்நாட்டு உற்பத்தியில் 5.9%ஆக வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-26 காலகட்டத்தில் இது 4.5%ஆக குறைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.