60 லட்சம் போலி கனக்சன்கள்..!!!
மத்திய அரசின் கீழ் இயங்கும் தகவல் தொடர்புத்துறை அண்மையில் 1கோடியே 14 லட்சம் சிம்கார்டுகளை ஆய்வு செய்தது. இதில் 60 லட்சத்துக்கும் மேலானவை போலி சிம்கார்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியானவை என்று தெரியவந்த 50 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 60 லட்சம் இணைப்புகளை அரசு துண்டித்துள்ளது. இணைய குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை பிடிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரிசர்வ் வங்கி,உள்துறை அமைச்சகம் வங்கிகள் ஆகியவை இணைந்து சைபர் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. மோசடியில் ஈடுபட்ட 7லட்சம் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவற்றை முடக்கியுள்ள மத்திய அரசு, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பது தொடர்பான பணிகளையும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 725,000மொபைல் போன் இணைப்புகள் முடக்க ஆணை கிடைத்திருப்பதாகவும்,அதில் 2.95 லட்சம் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகம்,மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த பணிகளை சிறப்பாக செய்வதாக அரசு பாராட்டியுள்ளது. சிம்கார்டு வாங்குவதில் முக சரிபார்ப்பு அமைப்புக்கு மத்திய அரசு அதிநவீன செய்ற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.இதன் மூலம் போலியான நபர்கள் சிம்கார்டு பெற முயற்சித்தால் அங்கேயே கண்டுபிடித்துவிட முடியும் என்கிறது மத்திய அரசு தரவுகள்.
மறு சரிபார்ப்புக்கு 50 லட்சம் இணைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவற்றில் சில இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.