ஜிஎஸ்டியால் அரசுக்கு வருவாய் இழப்பா…?
பிரதமரின் பொருளாதார ஆலோசகராக பிபேக் தெப்ராய் என்பவர் இருக்கிறார்.இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதன்படி,இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அரசுக்கு வரவேண்டிய முறையான வருமானம் வரவில்லை என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். மாறுபட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறியுள்ள அவர்,ஒரே வரி அளவாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி நடைமுறையை இன்னும் எளிமைப்படுத்தவேண்டியுள்ளது என கூறியுள்ள பிபேக், பொதுவான வரி விதிப்பு இருக்கவேண்டும் என்றால், மத்திய அரசு ஒரே சீரான ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஜிஎஸ்டியின் ஒரே அளவாக மொத்த நாட்டுக்கும் 17விழுக்காடாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஆளுங்கட்சி கட்டளை இடுவதை செய்யும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரே ஜிஎஸ்டி பற்றி கூறியுள்ள கருத்துகள் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.