10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி…
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாகவே இந்த சரிவு காணப்பட்டுள்ளது.பல நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும் இருப்பதால் இந்த வீழ்ச்சி காணப்பட்டது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக தற்போது 83 ரூபாய் 18 காசுகள் என்ற அளவு இப்போது எட்டப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக இந்த மதிப்பு 83ரூபாய் 04 பைசாவாக இருந்தது. இந்திய ரூபாயைப் போலவே சீன யுவான் கரன்சியும் 10 மாதங்களில் இல்லாத சரிவை கண்டிருக்கிறது. சர்வதேச அளவில் பணத்தின் மதிப்பை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெய்க்கு மிகமுக்கிய பங்கு உள்ளது.ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 89 டாலர் 76 காசுகளாக உள்ளது.இது கடந்தாண்டு நவம்பருக்கு பிறகு மிக அதிக அளவாகும். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதால் ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாலர்களில் சம்பளம் வாங்குவோர் ,இந்திய ரூபாய்க்கு மாற்றும்போது அவர்களுக்கு இன்னும் அதிக வருமானம் கிடைக்கும் என்பதே உண்மை.