ரிலையன்ஸில் காசை கொட்டும் கேகேஆர்..
உலகளவில் பிரபலமானதாக உள்ள முதலீட்டு நிறுவனமான KKR, ரிலையன்ஸ் குழுமத்தில் 2,069.50 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக செப்டம்பர் 11ஆம் தேதி அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக பங்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் 4ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.. 8.361லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளின் மதிப்பு உள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளுடன் சேர்த்து தற்போது கூடுதலாக 0.25%முதலீடுகளை அந்நிறுவனம் ரிலையன்ஸ் ரீட்டெயிலில் செய்திருக்கிறது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தை பொறுத்தவரை,26.7 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக திகழ்கிறது.இந்த நிறுவனத்தில் 18,500 கடைகள் இணைந்திருக்கின்றன.இந்திய ரீட்டெயில் துறையில் டிஜிட்டல் மயமாக்க இந்த முதலீடு உதவும் என்று ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் இஷா அம்பானி தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ரீட்டெயில் துறையில் டிஜிட்டலாக உருமாற்றும் திறன் பெற்ற ஒரு சிறந்த நிறுவனமாக ரிலையன்ஸ் ரீட்டெயில் திகழ்வதாக முதலீடு செய்திருக்கும் கேகே ஆர் நிறுவனம் கூறுகிறது.
இந்த பரிவர்த்தனைக்கு நிதி ஆலோசகராக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் திகழ்கிறது.கேகேஆர் நிறுவனம் என்பது ஏற்கனவே ஜியோவின் தளங்களுக்கும் முதலீடு செய்திருந்த நிறுவனம் என்பது கூடுதல் தகவல்களாகும்.