வேடிக்கை பார்க்கிறவங்களுக்கு இடமில்லை”
சிட்டி குழுமம் உலகம் முழுவதும் பிரபல பெயர் பெற்ற நிறுவனமாகும்.இதன் தலைமை செயல் அதிகாரி ஜேன் பிரேசர் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தங்கள் நிறுவனம் அசுரவேகத்தில் வளர விரும்புவதாகவும், இதற்காக உலகின் தலைசிறந்த பணியாளர்கள் தங்கள் நிறுவனம் கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர், வேடிக்கை பார்ப்போருக்கு தங்கள் நிறுவனத்தில் இடமில்லை என்றார். சிட்டி வங்கி,தனது முதலீட்டாளர்களுக்கு வங்கியில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க விரும்பி வருகிறது.நிறுவனத்தில் உயர்மட்ட கூட்டத்துக்கு பிறகு எவ்வளவு பேரை பணியில் இருந்து நீக்குவது என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.உதவியாளர்கள் பணிகள்தான் அதிகம் காலியாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நவம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன் விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய பிரேசர்,நவம்பருக்கு பிறகு மேலும் ஒரு வட்டி உயர்வு இருக்காது என நம்புவதாக கூறினார்.அமெரிக்காவில் மந்த நிலை வந்தாலும் அதனை எளிதாக சமாளித்துவிடலாம் என்று அவர் கூறியுள்ளார். பேங்க் ஆப் அமெரிக்காவின் அதிகாரிகளும் இதே பாணியில் கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் புழங்குவதாகவும் பேங்க் ஆப் அமெரிக்கா அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.