43%பங்குகளை விற்கும் அதானி..?
அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான 43.97%பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதானி வில்மர் கூட்டு நிறுவனத்தில்தான் பெரும்பாலான சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.உணவுத்துறையில் பார்ச்சூன் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த கூட்டு நிறுவனம் சமையல் எண்ணெயை விற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான டீல் முடிந்துவிடும் என்றும் விஷயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அதானி குழுமம் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட மறத்துவிட்டது.இது தொடர்பாக வெளியாகும் தகவல்களை செபியின் தரவுகளை வெளிப்படையாக வெளியிட இயலாது என்று அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூர் நிறுவனமான வில்மரும், அதானி குழுமம் இணைந்துதான் கூட்டு நிறுவனமாக இயங்கி வருகின்றன.இரண்டாவது காலாண்டின் முடிவுகள் கடந்த நவம்பர் 1 ஆம்தேதி வெளியிடப்பட்டது.இதில் நிகர நஷ்டம் 130கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நிகர லாபம் என்பது 48.76 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது நஷ்டமடைந்திருக்கிறது. அதானி வில்மர் கூட்டு நிறுவனத்தின் செலவுகள் 12,439 கோடி ரூபாயாகவும்,கடந்தாண்டு இதே காலகட்டமான இரண்டாவது காலாண்டில் 14,149 கோடி ரூபாயாக இருந்தது.
சமையல் எண்ணெய் விற்பனையில் ஏற்பட்ட பெரிய நஷ்டம் காரணமாக வணிக உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வருங்காலத்தில் அதிக விலைக்கு சமையல் எண்ணெய் போகும் என்று அதிக முதலீடு செய்து அது நஷ்டத்தில் முடிந்ததே இந்த விபரீதத்துக்கு காரணம் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.