விரைவில் ஜியோவில் வருகிறது செயற்கைக்கோள் இணைய சேவை
இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் செயல்படுத்த இருக்கிறது. இதற்கான ஒப்புதல் விரைவில் INspace அமைப்பிடம் இருந்து ஜியோவுக்கு கிடைக்க இருக்கிறது.
இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால்,நொடிக்கு ஜிகாபைட் அளவுக்கு இணைய சேவை கிடைக்க இருக்கிறது. இதற்கான முக்கிய ஆவணங்களை ஜியோ நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஆவணங்களை கவனமாக பரிசீலித்து,ஒப்புதல் அளிக்க பல அமைச்சகங்கள் இணைந்து பணியாற்றவேண்டியுள்ளது. Inspaceஅமைப்பின் தலைவரான பவன் கோயன்கா பேசியிருக்கிறார். ஜியோ பிளாட்ஃபார்ம்களில் லக்சம்பர்க்கைச் சேர்ந்த SES நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜியோ நிறுவனம் மட்டும் 51 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும்.
எலான் மஸ்கின் ஒன்வெப் செயற்கைக்கோள் சேவை போலவே ஜியோவும் இயங்க இருக்கிறது. அமேசான், டாடா நிறுவனமும் இந்த துறையில் கால்பதிக்க ஆர்வம் காட்டி வருகிறது. Eutelsat OneWeb, Jio-SES இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதலில் செல்வோருக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதும், உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு இந்த சேவை வர உள்ளது.
செயற்கைக்கோள் சார்ந்த சேவைகள் வாயிலாக 2033ஆம் ஆண்டு வரை மட்டும் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய அளவில் 2%ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. கிராமபுறங்களில் இணைய சேவை வழங்கஇந்த செயற்கைக்கோள் துறை புதிதாக இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.