கிளவுடு கிச்சனில் கவனம் செலுத்தும் ஐடிசி..
இந்தியாவில் ஐடிசி நிறுவனம் புதிய ரக பிஸ்னஸ்களில் கொடிகட்டி பறந்து வருகிறது. ஐடிசி நிறுவனத்தின் கிளவுடு கிச்சன் சேவை பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்க இருக்கிறது. இந்த சேவையில் வட இந்திய உணவுகள் எளிதாக கிடைக்கும். இந்த சேவை சென்னையிலும் உள்ளன. இந்த சேவை மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகமாக உள்ளது. காலை சிற்றுண்டிகளையும் அந்நிறுவனம் கவனம் செலுத்த இருக்கிறது. இந்த துறையை ஐடிசி நிறுவனம் ஃபுட் டெக் என்று பெயரிட்டுள்ளது. தற்போது வரை ஐடிசி ஆஷிர்வாத் சோல் , ஐடிசி மால்டர் செஃப், ஐடிசி சன்ஃபீஸ்ட் பேக்டு கிரியேஷன்ஸ் ஆகிய சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் 19 கிளவுடு கிச்சனும், சென்னையில் 4 கிளவுடு கிச்சன்கள் உள்ளன. இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒரு மத்திய கிச்சனும், செயற்கைக்கோள் அடிப்படையிலான பிற நகர கிச்சன்களும் ஒரே இடத்தில் கட்டுப்படுத்த இயலும்.
பெங்களூருவில் இதற்கான பிரீமியம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது ஹிட் அடித்ததால், மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. ஸ்விக்கி,சொமேட்டோ ஆகியவற்றின் உதவியுடன் இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் உள்ள மத்திய கிச்சனில் இருந்தபடி சென்னை, ஐதராபாத்தில் சேவைகள் வழங்க இயலும்.
சராசரியாக ஐடிசி கிளவுடு கிச்சனில் ஆர்டர் மதிப்பு 900 ரூபாயாக இருக்கிறது. இது தற்போது சந்தையில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஹோட்டல் வணிகத்தில் 18%ஜிஎஸ்டி,கிளவுடு கிச்சனுக்கு 5%மட்டுமே ஜிஎஸ்டி வரியாகும்.கிளவுடு கிச்சன் சேவையில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களை ஐடிசி டெலிவரி செய்திருக்கிறது.
இந்த வகை கிளவுடு கிச்சன் சேவைகளை மேம்படுத்த உணவு பாதுகாப்புத்துறை பணிகளை செய்து வருகிறது. ஐடிசியின் ஹோட்டல் வணிகத்தில் 90%வருவாய் நேரடியாகவும், 10%கிளவுடு கிச்சனிலும் இருந்து வருகிறது. தரமான சமையல் கலைஞர்களை கொண்டு உணவு டெக் துறையை இன்னும் மேம்படுத்தவேண்டியிருக்கிறது. உணவுத்துறையை முறைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.