சீனாவுக்கு மாற்றா இந்தியா?
இந்தியாவில் வரும் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி உள்நாட்டு சந்தையை அதிகரிக்கவும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக உற்பத்தியில் கொடிகட்டி வந்த சீனா தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. உலகின் பேக்டரி என்ற நிலையை மாற்றி உள்ளது. இந்தியா தைவான் உள்ளிட்ட நாடுகளுடன் சண்டை போட்டுள்ளதால் சீனாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சூழல்களும் சீனாவுக்கு எதிராகவே உள்ளது. குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதும் சீனாவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் வலுப்படுத்தி வருவதால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உற்பத்தி துறையில் சிறக்கும் என்று ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி, இந்தியாவில் இருந்து கணிசமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் வலுவாக காலூன்றி உள்ளனர்.
இதனால் சீனாவை நம்பியிருக்கும் தேவை குறைந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவிற்கு முதலீடுகளும் அதிகளவில் கிடைக்கும். இது மட்டுமின்று இந்தியா அண்மையில்தான் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடாவுடன் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பிரதமரின் கதி சக்தி, தேசிய பொருட்கள் சேமிப்பு கொள்கை ஆகியவை இந்திய உற்பத்தித்துறையை மேம்படுத்த உதவும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டங்கள் இந்திய உற்பத்தி சந்தையை அதிகமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் மட்டுமே முற்போக்கு வகையில் யோசித்து வரும் நிலையில் மற்ற மாநிலங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.