டாடா மோட்டார்ஸின் புது முயற்சி….
இந்தியாவின் 3 ஆவது பெரிய பயணிகள் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திகழ்கிறது.
விற்பனையில் புதுப்புது உத்திகளை கையாளும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வாகன விற்பனையுடன் சேர்ந்து வாகன பதிவுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இது சந்தையில் முதல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக திட்டமிடுதல் மற்றும் முன்கூட்டியே கணித்தல் என்பது சில்லறையாக மட்டுமே செய்யப்பட்டு வந்தது. அதாவது இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், குறிப்பிட்ட வாகனங்களை டீலர்கள் மூலம் அனுப்பி அதன் பின்னர், பதிவு உள்ளிட்ட அம்சங்களை செய்ய உதவி செய்வர்.எளிமையாக சொல்ல வேண்டுமெனில், கார் விற்கப்பட்டால் மட்டுமே பணம் செலுத்தி முடித்த பிறகுதான் வாகன பதிவெண் தரப்படும். ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் புக் செய்ய விரும்பினாலே வாகன பதிவெண்ணுக்கான பணிகளை டாடா மோட்டார்ஸ் செய்கிறது.
இது விற்பனையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வாஹன் என்ற மத்திய அரசின் இணையம் சார்ந்த தரவுகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உதவும் என்று கூறப்படுகிறது. புதிய முறையால் ஒவ்வொரு முகவர்களின் பெர்பார்மன்ஸும் கடந்த அக்டோபர் முதல் பலனடைந்து வருகிறது.
சந்தை மூலதனத்தை எளிதாக்கும் முயற்சியாகவும் இதனை பார்ப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். கடந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பதிவுகளை சராசரியாக 50,386 என்ற அளவில் வைத்திருக்கிறது. இது கடந்த காலங்களில் விற்கப்பட்ட 46,029 யூனிட்களை விட அதிகம், கடந்த 10மாதங்களில் இல்லாத அளவுக்கு பதிவுகள் அதிகளவில் இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வளவு வாகனங்கள் சந்தையில் தேவை என்பதை வாஹன் பதிவு கச்சிதமாக வெளிப்படுத்தி வருவதாகவும், இது சந்தையில் விற்பனைக்கான கலாசாரத்தையே அடிப்படையில் இருந்து மாற்றிவிட்டதாக சைலேஷ் தெரிவித்துள்ளார். டீலர்கள் அளவில் தெரிவிக்கப்படும் தரவுகள் போலியானவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், வாஹன் அடிப்படையிலான தரவுகள், உண்மையான சில்லறை வணிகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க தலைவர் மனீஷ் ராஜ் சிங்கானியா கூறியுள்ளார்.
வாஹன் அடிப்படையிலான விற்பனை டாடா மோட்டார்ஸின் நிதி சுழற்சிக்கு பெரிதும் உதவுவதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கிறது. பழைய நடைமுறைப்படி பண வரத்து குறைவாக இருந்துள்ளது. ஆனால் வாஹன் அடிப்படையிலான புதிய முறைக்கு பிறகு அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.