பசுமை ஹைட்ரஜன் விலை குறைகிறது…
ஜி20 உச்சிமாநாட்டை தலைமையேற்று நடத்திய நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயலர் அமிதாப் காந்த் பசுமை ஹைட்ரஜன் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். ficci அமைப்பின் சுழற்சி பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் அமிதாப் காந்த் பங்கேற்று பேசினார்.
2030 ஆம் ஆண்டில் ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜன் ஒரு கிலோ தயாரிக்க 1 டாலர் மட்டுமே தேவைப்படும் என்றார். தற்போது இதனை தயாரிக்க ஒரு கிலோவுக்கு 4.5 டாலர்கள் செலவாகிறது என்றார். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தற்போதுள்ள ஏழரை விழுக்காட்டில் இருந்து 9 முதல் 10 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க உகந்த சூழல் இருப்பதாக சுட்டிக்காட்டிய காந்த்,இந்திய பொருளாதாரம் நேர்க்கோட்டில் இருப்பதாகவும்,இது விரைவில் சுழற்சியாக மாறவேண்டும் என்று தெரிவித்தார். உள்கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமிதாப் காந்த் குறிப்பிட்டார். நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு,மக்கள் தொகை பெருக்கம் ஆகியவை கார்பன் உமிழ்வு அதிகரிக்க முக்கிய காரணம் என்றும், கார்பன் அடிப்படையிலான மறுசுழற்சி மற்றும் அதில் புதுமைகளை புகுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.