வந்துவிட்டது டாடா பஞ்ச் மின்சார கார்…
இந்தியாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மின்சார கார்களில் முக்கியமானதாக கருதப்படுவது டாடா பஞ்ச் ஈ.வி. கார். மிகவும் கச்சிதமான SUVரக காராக இந்த கார் உருவெடுத்துள்ளது. இதன் தொடக்க விலை 10.99 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும், இதேபோல் இரண்டாவது ரக கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இந்த காரில் 5 பேர் பயணம் செய்ய முடியும். 190 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வகையில் இதுவே அதிக கிரவுண்டு கிளியரன்ஸ் கொண்ட காராக அமைந்துள்ளது. இந்த கார் மக்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்பட இருக்கிறது. சிட்ரியான் இசி3 ரக காருக்கு போட்டியாக இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது.
MG காமெட் ரக மின்சார கார்கள் மற்றும் டாடா நிறுவனத்தின் டாடா டியாகோ ரக மின்சார கார்களுக்கு போட்டியாக இந்த கார் அறிமுகமாகியுள்ளது. டாடா பஞ்ச் ரக கார்கள் அறிமுக விலையாக 10.99 லட்சம் ரூபாய் நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை 14.99 லட்சம் ரூபாயாகும். 25 மற்றும் 35 கிலோவாட் என இரண்டு வகைகளில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் ரக கார் 315 கிலோமீட்டரும், இரண்டாவது ரக கார் 421 கிலோமீட்டர் தூரமும் பயணம் செய்யும். மழை தூசு என எதுவும் ஆகாத வகையில் ஐபி67 ரேட்டிங் அந்த பேட்டரிகளுக்கு சான்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கார்களுக்கு 8 ஆண்டுகள் வாரண்டியும், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டியும் உள்ளது. இரண்டு ரக கார்களிலும் நிரந்தர மேக்னட் நான் சின்கரனஸ் வகை மோட்டார்கள் உள்ளன. இந்த காருக்கு உள் பகுதியில் 16 அங்குல தொடுதிரை இருக்கிறது. டிஸ்க் ரக பிரேக்குகள் உள்ளன. 360 லிட்டர் பூட் ஸ்பேஸ், 14 லிட்டர் முன்பக்க டிரங்க் பானட் உள்ளன. இந்த புதிய காரில் 6 ஏர்பேக்குகள், ABS, குரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
100 கிலோமீட்டர் தூரத்தை இந்த கார் 9.5 விநாடிகளில் எட்டிவிடும், வெறும் 21 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினாலே போதும் இந்த காரை நீங்கள் ஆர்டர் செய்துவிடமுடியும். வெள்ளை, சாம்பல், சிவப்பு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இந்த கார் வர இருக்கிறது. punch ev, punch ev longrange என இரண்டு பெயர்களில் இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதிலும் சன்ரூஃப் மற்றும் சன்ரூப் இல்லாமல் என இரண்டு வகைகளில் கார்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன.