மாற்று ஆற்றலில் அசத்தும் அதானி..
உலகிலேயே அதிகசக்தி வாய்ந்த புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தி மையத்தை கவுதம் அதானி பாகிஸ்தானை ஒட்டி அமைக்க இருக்கிறார். 2022-ல் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற பட்டத்தை 154 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துடன் கவுதம் அதானி ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த அதானியன் வாழ்வில் பெரிய திடிர் பாதிப்பை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை ஏற்படுத்தியது. கரியமிலு வாயுவை வெளியேற்றுவதை தடுக்க, இந்திய அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு மிகப்பெரிய புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளாகத்தை கட்ட அதானி ஆர்வம் காட்டி வருகிறார் அதானி. இது தொடர்பான கட்டுமானப்பணிகள் வேகமெடுத்துள்ளதாக கூறியுள்ளார். 2027 ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு நிகராக பெரிய புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறையை மேம்படுத்த இருப்பதாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். இந்த புதிய பூங்காவில் 30 ஜிகாவாட்ஸ் சூரிய சக்தி மற்றும் காற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கின்றன.
இது 1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆலைகளில் இருந்து மின்சாரம் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.
முந்த்ராவில் உள்ள துறைமுகப்பகுதியில் இதற்கென பிரத்யே க ஆலையையே அதானி நடத்தி வருகிறார். காற்றாலைகளுக்கு 80 மீட்டர் நீள இறக்கை, சோலார் பேனல்களும் தயாராகி வருகின்றன. இதற்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அட்டகாசமான திட்டங்களை வகுத்ததாக பிரதமர் மோடியை கவுதம் அதானி புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆற்றல் பூங்காவை கட்டமைத்து நிர்வகிப்பதற்கு பின்னால் பணியாளர்களின் கடினமான பணி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோலார் மின்சார ஆற்றல் என்பது மோசமான பல ரசாயனங்களைவிட மேலானது என்று அதானி குழும அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.