ரோல்ஸ் ராய்ஸில் இந்தியாவில் முதல் மின்சார கார்..
சொகுசு கார்களின் ராஜா என்று ரோல்ஸ் ராய்ஸ் என்ற பிரிட்டன் சொகுசு கார்களை சொல்லலாம். ஸ்பெக்டர் என்ற புதிய ரக மின்சார காரை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஜனவரி 19ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ஏழரை கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவன வரலாற்றிலேயே அறிமுகமாகும் முதல் மின்சார கார் இதுவாகும். இந்த கார்களில் இரண்டு டோர்கள் மட்டுமே இருக்கும்.
புதிய பவர் டிரெயின், இரட்டை மோட்டார்கள், 577 குதிரைசக்தியையும் 900 நேனோமீட்டர் டார்க் வசதியும் அளிக்கிறது.
ஒரு முறை சார்ஜ் போட்டால் 520 கிலோமீட்டர் தூரம் வரை இந்த கார் பயணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
100கிலோமீட்டர் வேகத்தை இந்த கார் வெறும் 4.5 விநாடிகளில் எட்டிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 அங்குல தொடுதிரை 102கிலோவாட் பேட்டரி இந்த காரின் தனித்துவமாகும். இந்த காரின் எடை 2975 கிலோ2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருளில் இயங்கும் கார்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் புதிய மின்சார கார் சந்தையில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இந்தியாவில் கடந்தாண்டில் மட்டும் 82 ஆயிரம் மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன. போதுமான சார்ஜிங் கட்டமைப்புகள் இந்தியாவில் இல்லாததால் பொதுமக்கள் மின்சார கார்களை இந்தியாவில் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தியாவிற்குள்ளேயே மின்சார கார்களை உற்பத்தி செய்தால் இறக்குமதி வரி15 விழுக்காடாக குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.