மீண்டெழுந்த இந்திய சந்தைகள்..
ஜனவரி 19ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 496புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 683 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 21,622 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தையில் இன்போசிஸ், ONGC, Bharti Airtel, NTPC, Tech Mahindra, SBI Life Insurance உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. இதேநேரம்IndusInd Bank, HDFC Bank, Kotak Mahindra Bank, Divis Lab, Adani Ports உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ஆட்டோமொபைல்,தகவல் தொழில்நுட்பத்துறை , உலோகம்,எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. Swan Energy, Rail Vikas Nigam, NBCC (India), JK Paper, IRFC, Ircon International, Intellect Design, Imagicaaworld Entertainment, HUDCO, HP Adhesives, GIC Housing Finance, Aarti Industries உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் 52 வார உச்ச விலையை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 240 ரூபாய் உயர்ந்து 46480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் விலை உயர்ந்து 5810 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு , 20 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 20 காசுகளாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை 200 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்