மீண்டும் ஆப்பிளை மிரட்டும் ஐரோப்பிய ஒன்றியம்..
எல்லா போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர்கள் வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிய நிலையில், தற்போது உலகம் முழுவதும் டைப் சி ரக போன்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இந்த சூழலில் மீண்டும் ஐரோப்பிய யூனியனுக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் மோதல் முற்றி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர்கள் விதிகளை மதிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது 30 விழுக்காடு கூடுதல் பணம் இல்லாமல் பேமண்ட் அளிக்கும் வசதியை ஆப்பிள் செய்து வந்தது. இது DMA என்ற விதியை மீறியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்று அதிரடி காட்டியுள்ளது. எந்தபுதிய கண்டுபிடிப்புகள் ஆப்பிள் ஸ்டோர்களில் செயலி வடிவில் இருந்தாலும் அது சைபர் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதி., ஆப்பிள் பே வசதிக்கு பதிலாக மற்ற செயலிகள் வழியாகவும் பணம் செலுத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் வழிவகை உள்ளது. இந்த சூழலில் ஆப்பிள் ஸ்டோரை பயன்படுத்தாமல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்பினால் அதற்கு அண்மையில் தனியாக 50 யூரோக்கள் பணம் வசூலிக்கப்பட்டது. இதுதான் தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது. மெட்டா, ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட ஏராளமான இலவச நிறுவனங்கள் ஆப்பிளின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் எதையும் தரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.