எல் ஐசி ஐபிஓ அப்டேட்…
எல்ஐசி ஆரம்பப்பங்கு வெளியீடு செய்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்நிலையில் இந்தியர்கள் எல்ஐசி பங்குகளை வாங்கி அதன் மதிப்பு 75 விழுக்காடு அளவுக்கு மட்டுமே உள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி நிலவரப்படி எல் ஐசியின் பங்கு விலை 1.9%உயர்ந்தது. இதன் காரணமாக எல்ஐசியின் பங்கின் சந்தை மதிப்பு மொத்தமாக 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்குகளை மட்டுமே எல்ஐசி ஐபிஓவின் மதிப்பு உயர்ந்தது. போதுமான லாபம் கிடைக்காத சூழல் ,தனிநபர்களின் போட்டி ஆகியவை காரணமாக வாங்கிய தொகையை விட 40 விழுக்காடு குறைவாகவே எல்ஐசியின் மதிப்பு உள்ளது. ஈக்விட்டி சந்தைகளில் அசுர வளர்ச்சி என்பது எல்ஐசிக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. தற்போது அளவு குறைவாக இருந்தாலும் கணிசமான அளவுக்கு டிவிடண்ட் வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பங்குச்சந்தைகளில் எல்ஐசி பங்குகளை வைத்திருக்கும் மக்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 7.1 டிரில்லியன் ரூபாயாகவும், 85.73 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.