விட்டதை பிடித்த பங்குச்சந்தைகள்..
மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்தத்க நேர முடிவில் 612 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை முடித்தது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 203 புள்ளிகள் உயர்ந்து 21,725 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. ஏற்ற இறக்கமான சந்தை சூழலில் தொடக்கத்தில் நஷ்டத்தை சந்தைகள் சந்தித்தன. ஆனால் இடையில் நிஃப்டி 21,700 புள்ளிகள் வரை கூட சென்று வந்தது. Dr Reddy’s Laboratories, Eicher Motors, Sun Pharma, Divis Labs, Tata Motors ஆகிய நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன. L&T, Titan Company, Tata Consumer,BPCL நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. ஆட்டோமொபைல், வங்கி, சுகாதாரத்துறை,உலோகத்துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன.
பங்குச்சந்தைகளில் ஏற்றம் நிலவிய நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 80 ரூபாய் குறைந்து , 46 ஆயிரத்து800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் முன்தின விலையை விட 10 ரூபாய் குறைந்து 5850 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 78 ரூபாயும்,ஒரு கிலோ 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.