22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

திட்டத்தை ஒத்தி வைக்கிறதா இண்டெல்…?

பிரபல கணினி சிப் உற்பத்தி நிறுவனமான இண்டெல் நிறுவனம் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கணினி சிப் தயாரிக்கும் பணிகளை தாமதப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணப்புழக்கம் மற்றும் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக உண்டான புகாரில் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தசிப் தயாரிக்கும் ஆலை முதலில் 2025-ல் தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது கட்டுமானப்பணிகள் 2026 ஆம் ஆண்டு வரை எதுவும் நடக்காது என்று தெரியவந்துள்ளது. இந்த கால தாமதத்தால் சிப் தயாரிப்பு நிறுவனமான இண்டலின் பங்குகள் 1.5 விழுக்காடு வரை குறைந்து வர்த்தகமாகின்றன. மிகப்பெரிய கட்டுமானம் என்பதால் கால தாமதம் ஏற்படலாம் என்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர். வருங்காலங்களில் கணினிகளின் பயன்பாடு எப்படி இருக்கும் என்று முடிவுக்கு வர இயலாத நிலையில் பெரிய முதலீடுகள் தேவைப்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மக்களில் பெரும்பானவர்கள் செயற்கை நுண்ணறிவு தரவு சர்வர்களை நாடத் தொடங்கியுள்ளனர். Nvidia மற்றும் சில நிறுவனங்கள் மைக்ரோ டிவைஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் வழக்கமான சர்வர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் நிலையில் இண்டல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *