“முதலீட்டாளர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்ல”
ஒரு நிறுவனம் அசுர வேகம் கண்டு பின்னர் அது அதள பாதாளத்தில் வீழ்ந்த கதையை கண்கூடாக காண வேண்டுமெனில் சிறந்த உதாரணமாக பைஜூஸ் நிறுவனத்தை சொல்லலாம். இந்நிலையில் நிர்வாக குழுவை மாற்ற பைஜுஸ் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயல் அதிகாரியை மாற்ற நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று பைஜூஸ் விளக்கம் அளித்துள்ளது. தலைமை செயல் அதிகாரியை மாற்றி நிர்வாகத்தையே மாற்ற வாக்களிக்கும் உரிமை முதலீட்டாளர்களுக்கு இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கூடுதல் முதலீட்டாளர்களை ஈர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பங்குகளை வைத்திருப்போருக்கும் பைஜூஸ், நிறுவனத்தின் நிறுவனரான பைஜூஸ் ரவீந்திரனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமம் யாருக்கும் என்ற கேள்வியே தற்போது உருவாகியுள்ளது. முதலீட்டாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள மோதலால் நிறுவன ஊழியர்கள் தான் பாதிக்கப்படுவதாகவும், வியாபாரம் நடப்பது தொடர்ந்து நடக்க வேண்டிய பணிகள் என்றும் பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.