வீதிக்கு வந்த பைஜுஸின் அமெரிக்க பிரிவு…
இந்தியாவின் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸின் அமெரிக்க பிரிவு திவால் நோட்டீஸை அளித்துள்ளது. அமெரிக்காவின் டெலாவரில் இது தொடர்பான வழக்கின்போது தங்கள் நிறுவனம் திவாலாகிவிட்டதாக பைஜூஸ் தெரிவித்திருக்கிறது. 1 பில்லியனில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான செலவுகள் நிறுவனத்துக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைஜூசின் ஆல்பா என்ற அந்நிறுவனத்தின் சொத்துகள் 500மில்லியனில் இருந்து 1பில்லியன் அளவுக்கு மட்டுமே இருப்பதாகவும், ஆனால் நூறு முதல் 199 பேருக்கு கடன் தரவேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அந்நிறுவனம் கடந்த 2022-ல் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பே 1 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் உரிமைகளை விற்பதன் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றும் உடனடி கடன்களை அடைக்க அந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் அந்நிறுவனத்துக்குஉள்ளது. இதனை குறிப்பிட்டு பலரை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் பைஜூஸ் குறிப்பிட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள அடுக்கடுக்கான புகார்கள் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு பணப்பரிமாற்ற விதிகளின்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.