எச்டிஎப்சி நிறுவனம் விளக்கம்…
இண்டஸ் இன்ட் வங்கியில் எச்டிஎப்சி நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி கேட்ட கேள்விகளுக்கு எச்டிஎப்சி நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. இண்டஸ் இண்ட் வங்கியில் 9.5 விழுக்காடு பங்குகளை எச்டிஎப்சி வங்கி நிறுவனம் வாங்க கடந்த திங்கட்கிழமை ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. அடுத்த ஓராண்டிற்குள் 9.5 பங்குகளை வாங்க வேண்டும் என்றும் அவ்வாறு வாங்கவில்லை என்றால் இந்த ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியதுடன் விளக்கமும் கேட்கப்பட்டது. இதற்கு எச்டிஎப்சி வங்கி விளக்கம் அளித்திருக்கிறது. அதாவது எச்டிஎப்சி வங்கிப்பிரிவு முதலீடு செய்யவில்லை என்றும் HDFC bank குழுமம்தான் முதலீடு செய்ததாக குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வங்கியான இண்டஸ் இண்ட் வங்கியும் விளக்கம் அளித்திருக்கிறது. அதன்படி, எச்டிஎப்சி வங்கி 9.5 விழுக்காடுக்கு அதிகமாக பங்குகளை வாங்க முடியாது என்றும், 5 விழுக்காடுக்கும் குறைவாக பங்கு சரியும் போது ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை என்றும் இண்டஸ் இண்ட் வங்கி தெரிவித்துள்ளது.