எச்சரிக்கையை மதிக்காததால்தான் நடவடிக்கை….
விதிகளை மீறியதாலும், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததாலும். பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்நிலையில் இது பற்றி ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.
போதுமான அவகாசம் பேடிஎம் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், அதற்கு பேடிஎம் சரியாக பதில் தராததால்தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டார்., இதனிடையே பேடிஎம் விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் ஆளுநர் சக்தி காந்ததாஸ். தேவைக்கு அதிகமான நேரத்தை சில நேரங்களில் ரிசர்வ்வங்கி அளித்தும் சில நிறுவனங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார். நாட்டின் நிதி கட்டமைப்பு பற்றி எந்த கவலையும் தற்போது தேவையில்லை என்று கூறியுள்ள அவர், கட்டுப்பாடுகளில் எந்த குறைபாடுகளும் இருக்காது என்றார். அந்தந்த சூழலுக்கு ஏற்ப முடிவுகளை மத்திய வங்கி செய்து வருவதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். பேடிஎம் செயலிக்கு எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பேடிஎம் நிறுவன செய்தித் தொடர்பாளர், பேடிஎம் செயலி வழக்கம் போல செயல்படும் என்றும் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார். பேடிஎம் நிறுவனத்தின் மீது கடந்த 31 ஆம் தேதி பேமண்ட் நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகள் வரும் 29 ஆம் தேதி முதல் அமலாக இறுக்கிறது. இதனிடையே பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஷேகர் சர்மா, ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்து, நிறுவனத்தின் நிலையை விளக்கினார். நிதியமைச்சக அதிகாரிகளிடம் உறுதியளிப்பதை செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேடிஎம் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாராம். 459 ரூபாய் என்ற அளவில் ஒரு பங்கு விற்பனையானது. இது கடந்த 5 ஆம் தேதி நிலவரப்படி 42.4 விழுக்காடு அளவுக்கு குறைவாகும். அதாவது சந்தை மதிப்பில் 20,500 கோடி ருபாய் அளவுக்கு சரிவு காணப்பட்டுள்ளது.