ஏர்பஸ் விமானங்களுக்கு கதவு தயாரிக்கும் பிரபல நிறுவனம்..
மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் டைனாமிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 220 வகை விமானங்களுக்கு கதவு தயாரிக்கிறது. இதே நிறுவனம் A330,A320 ரக விமானங்களுக்கு பக்கம் மற்றும் பின்பகுதியில் உள்ள ஃபிளாப் டிராக் பீம்களை தயாரித்து வருகிறது. அண்மையில் பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா முன்னிலையில்,பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்திய விமான போக்குவரத்து உற்பத்தி நிறுவனத்தின் ஏற்றமதியில் தனிப்பட்ட நிறுவனம் செய்யும் மிகப்பெரிய முதலீடாக இருக்கிறது. என்கிறார் ஏர்பஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ரெமி மைலார்ட். டைனமிக் டெக் நிறுவனத்தின் பங்குகள் இந்த அறிவிப்புக்கு பிறகு, 10.7 விழுக்காடு உயர்ந்து 7780 ரூபாயாக வியாழக்கிழமை வணிகம் நடைபெற்றது. முதல் விமான கதவு அடுத்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியாகும் என்று டைனமிக் டெக் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்., ஏற்கனவே ஏர்பஸ் நிறுவனத்துக்கு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் பெரிய சரக்கு விமான கதவுகளை செய்து வந்தது. இந்நிலையில் டாடாவுக்கு அடுத்தபடியாக தற்போது டைனமிக் டெக் நிறுவனம் இந்த உற்பத்தியை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டிய தருணம் இது என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வரலாற்றில் முதன் முறையாக ஒவ்வொரு ஏர்பஸ் நிறுவன வணிக பயன்பாட்டு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.